வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

சட்டங்கள்

வணக்கம்,வழக்கம்,வணிகம்,இல்லறம்,நல்லறம்,தொடர்பான வினாக்களுக்கு ஆதாரத்துடன் அளிக்கப்பட அருமையானபதில்கள்

குழந்தைப் பெயர்கள்

அரபு மற்றும் அர்த்தத்துடன் முஸ்லிம் குழந்தைகளுக்கான அழகுத் திருப் பெயர்கள்

அரபுக் கல்லூரிகள்

தரணி எங்கும் தலைசிறந்து விளங்கும் அரபுக் கல்லூரிகள்

வலைதள வல்லுநர்கள்

இந்த தளத்தில் அரும்பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள்

07 January 2016

பிறர் நலம் பேணிய பெருமானார் (ஸல்) அவர்கள்


பிறர் நலம் பேணிய பெருமானார் (ஸல்) அவர்கள்

மக்களிடம் மழுங்கி வரும் குணங்களில் பிறர் நலம் பேணுதளுமொன்று. பிறர் நலம் பேணுவதால் என்ன நன்மை இருக்கின்றது என்பதை சமுதாயம் உணராததே இதற்கு காரணம்.
ஈமான் என்றால் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் மட்டும் நம்பிக்கை கொள்வது ஈமான் அல்ல. இவை உள்ளம் சார்ந்தது. ஈமான் உள்ளவனிடம் சில நல்ல பண்புகள் வெளிப்பட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். இதுவும் ஈமானில் கட்டுப்பட்டது.
அவற்றுள் ஒன்று தான் பிறர் நலம் நாடல். அருமை நாயகம் இப்படி சொன்னார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «المُسْلِمُ مَنْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவர் தான் முஸ்லிம். எவரிடமிருந்து தங்கள் உயிர் மற்றும் பொருட்கள் பற்றி அச்சமற்று மக்கள் இருக்கிறார்களோ அவர் தான் உண்மையான முஃமின்  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்
நூல்: திர்மிதீ
மேற்கூறப்பட்ட ஹதீஸில் பிறர் நலம் நாடுதலை  ஈமானோடு தொடர்பு படுத்தி (ஸல்) பேசியதிலிருந்து  மார்க்கம் எவ்வளவு சீரிய பார்வையில் உணர்த்துகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்ல இஸ்லாத்திற்கு வரக்கூடிய நபர்களிடம் உறுதிமொழி
عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «بَايَعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ»

நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன்என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி
வழக்கமாக ஒரு மதத்தில் இணையும் போது நான் கடவுளுக்கு செய்ய வேண்டிய காரியங்கள்  இன்னின்ன செய்வேன் என சொல்வது நடைமுறை. ஆனால் இஸ்லாத்திற்கு வரக்கூடிய நபர்களிடம் பெருமானார் அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமைகளையும் செய்ய வேண்டும். அத்தோடு பிறர் நலம் நாடுதலை இஸ்லாத்தின் ஒரு அங்கமாகவும்  ஆக்குகிறார்கள்.
சுவன வாடையும் தடையாக இருக்க காரணம்
عَنِ الحَسَنِ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ زِيَادٍ، عَادَ مَعْقِلَ بْنَ يَسَارٍ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ، فَقَالَ لَهُ مَعْقِلٌ إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ اسْتَرْعَاهُ اللَّهُ رَعِيَّةً، فَلَمْ يَحُطْهَا بِنَصِيحَةٍ، إِلَّا لَمْ يَجِدْ رَائِحَةَ الجَنَّةِ»
ஹஸன் அல்பசரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.  (நபித் தோழர்) மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி(ஸல்) அவர்கள், “ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்என்று சொல்ல கேட்டேன்எனக் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி
பிறர் நலன் காக்க பொறுப்பு தரப்பட்டு யார் அந்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற வில்லையோ அவருக்கு சொர்கத்தின் வாடை தடை செய்யப்படுகிறது என்று சொன்னால் பிறர் நலனில் நாம் எவ்வளவு அக்கறையோடு இருக்கிறோம் என்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
முஸ்லிமாக இருக்கிறார், ஈமான் கொண்டுள்ளார், ஜகாத்தை நிறைவேற்றி விட்டார்  ஆனால் சுவனம் செல்ல முடியவில்லை. காரணம் பொறுப்பு கொடுக்கப்பட்டும் பிறர் நலன் நாடாமையே.
பிறர் தொந்தரவு தந்தால் கையாளும் முறை
عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ، أَنْ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: آذَانِي جَارِي، فَقَالَ: «اصْبِرْ»، ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ , فَقَالَ: آذَانِي جَارِي، فَقَالَ: «اصْبِرْ»، ثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ فَقَالَ، آذَانِي جَارِي، فَقَالَ: " اعْمَدْ إِلَى مَتَاعِكَ فَاقْذِفْهُ فِي السِّكَّةِ، فَإِذَا مَرَّ بِكَ أَحَدٌ فَقُلْ: آذَانِي جَارِي، فَتَحِقُّ عَلَيْهِ اللَّعْنَةُ أَوْ تَجِبُ عَلَيْهِ اللَّعْنَةُ "    
ஒரு மனிதர் நாயகத்திடம் வந்து நாயகமே அண்டை வீட்டுக்காரர் எனக்கு தொந்தரவு தருகிறார் என்று கூற பொறுமையோடு இருங்கள் எனக்கூறினார்கள். இரண்டாவது முறையாக வந்து அதே போன்று கூற அதையே கூறினார்கள். மூன்றாவது முறையாக அதையே சொன்ன போது உம்முடைய பொருளை வெளியே வந்து பாதையில் போடு. உமக்கருகில் வந்து நிலைமை விசாரிப்பவரிடம் இவர் எனக்கு தொந்தரவு தருகிறார் என சொல். அப்படி நீ சொன்னால் உமக்கு தொந்தரவு அளித்தவனின் மீது அல்லாஹ்வின் சாபம் உறுதியாகி விடும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.                                                     (أخرج ابن أبي شيبة في المصنف)

மற்றொரு அறிவிப்பில் மக்களெல்லாம் தொந்தரவு செய்த அவனை
فَجَعَلُوا يَقُولُونَ: اللَّهُمَّ الْعَنْهُ، اللَّهُمَّ أَخْزِهِ. فَبَلَغَهُ، فَأَتَاهُ فَقَالَ: ارْجِعْ إِلَى مَنْزِلِكَ، فَوَاللَّهِ لَا أُؤْذِيكَ     
(الادب المفرد)
யா அல்லாஹ் இவனை சபிப்பாயாக கேவலப்படுத்துவாயாக என்று கூறியவுடன் அவனுக்கு அந்த செய்தி கிடைத்து நீ வீட்டுக்கு செல் நான் உனக்கு நோவினை தரமாட்டேன் என பாதிக்கப்பட்டவருக்கு சொன்னதாக புகாரி (ரஹ்) அவர்களின் அதபுல் முப்ரத் என்ற கிதாபில் பதிவு செய்யப்படுகிறது.
இன்று தன் நலத்தையும் கெடுத்து மட்டுமல்லாது பிறர் நலத்தை கெடுக்கக்கூடிய ஏராளமானவர்களைப் பார்க்கலாம்.  குறிப்பாக புகை பிடிப்பது இது அவனுக்கு மட்டும் கேடல்ல. அருகிலிருக்கும் அனைவருக்கும் கேட்டை தரவல்லது.
இந்தியாவில் வருடத்திற்கு புகையிலை பொருட்களை பயன்படுத்தியதால் 10 லட்சம்பேர் இறக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 55 ஆயிரம் பேர் சாகிறார்கள். தமிழ்நாட்டில் 5800 புதிய புற்றுநோயாளிகள் வருடத்திற்கு வருகிறார்கள்.
பீடி பிடிப்பதால் வாயின் ஓரத்தில் புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோய் வந்தவர்களில் 40 சதவீதத்தினர் புகையிலை பயன்படுத்தியவர்கள் என்ற புள்ளிவிவரம் கிடைத்துள்ளது. நுரையீரல் புற்றுநோய் புகை பிடிப்பவர்களுக்கே வருகிறது.
இந்த நோய் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, அருகிலிருக்கும் அனைவருக்கும் இதே கதி தான். நம் நலம் கெடுவது மட்டுமல்லாது பிறர் நலத்தில் பிரச்சனையும் செய்கிறோம்.
மார்க்கம் என்றாலே நலம் நாடுதலே
عَنْ تَمِيمٍ الدَّارِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الدِّينُ النَّصِيحَةُ» قُلْنَا: لِمَنْ؟ قَالَ: «لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلِأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ
தமீமுத் தாரீ (ரலி) அவர்கல் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே நலம் நாடுவது தான் என்று கூறினார்கள்.நாங்கள்,யாருக்கு (நலம் நாடுவது)?“ என்று கேட்டோம்.நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும் என்று பதிலளித்தார்கள்.                               (முஸ்லிம்)

மார்க்கம் என்றாலே நலம் நாடுதல் தான் என்று நாயகம் நவின்றதிலிருந்து விளங்க முடிகிறது. நலம் நாடுவது எல்லோரின் மீதும் கடமை என்று.
யூதனும் விரும்பிய உத்தமர் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்)

كان لعبد الله بن مبارك رضي الله عنه جار يهودي.. فأراد ذلك الجار أن يبيع داره.. فقيل له: بـِكـَم تبيع ؟      
قال: بـِألفين.. فقيل له: إن الدار لا تساوي إلا الفاً . فقال: صدقتم.. ولكنْ ألفٌ للدار؛ وألفٌ لجوار عبد الله.. فأُخبـِرَ ابن مبارك بذلك فدعاه فأعطاه ثمن الدار وقال له: لا تبعها
அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களுக்கு அண்டை வீட்டில் வசித்த யூதன் ஒருவன் தன வீட்டை இரண்டாயிரம் தீனாருக்கு விற்றான். ஆயிரத்திற்கு கூட  போகாத வீட்டை இரண்டாயிரம் தீனாருக்கு விற்கிறேன் என்கிறாயே என்று கேட்ட  பொழுது யூதன் சொன்ன வார்த்தை. நீங்கள் சொன்னது உண்மை தான். ஆயிரம் தீனார் வீட்டிற்கு ஆயிரம் தீனார் என் அண்டை வீட்டுக்காரர் அப்துல்லாஹ் இப்னு முபாரக் அவர்களுக்கு என்று கூறினார். இச்செய்தி அப்துல்லாஹ் இப்னு முபாரக் அவர்களுக்கு சென்ற நேரத்தில் யூதனை அழைத்து அதன் தொகையை அவனுக்கே  கொடுத்து இந்த வீட்டை நீ விற்க வேண்டாம் என்று கூறினார்கள்.
ஒரு மடங்கு விற்க வேண்டிய வீட்டை இரு மடங்காக விற்க காரணம். அப்துல்லாஹ் இப்னு முபாரக் தன வீட்டிற்கு எதை வாங்கினாலும் அதை தன அண்டை வீடான யூதனுக்கும் வாங்கி வரும் பழக்கமுடையவராக இருந்தார்கள். அதன் சம்பவம் இதோ...
عبد الله بن المبارك سكن مع جار يهودي في خراسان ، وكان ابن المبارك مع اليهودي كالأخ مع أخيه، إذا اشترى لحماً لأطفاله قدم اللحم لأطفال الجار، إذا كسا أبناءه كسا أبناء اليهودي، كان اليهودي يؤذيه بنفاياته وزبالاته على بيته، فيسكت ويضمها ويقول لأهله: لا تخبروا اليهودي، وبعد فترة أتى التجار إلى اليهودي قالوا: نشتري بيتك، قال: بيتي بألفي دينار، أما ألف فقيمته، وأما ألف فقيمة جوار ابن المبارك ، فأخبر ابن المبارك فدمعت عينه وقال: " اللهم اهده إلى الإسلام " وما هي إلا لحظات ويأتي اليهودي ويقول: أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً رسول الله، إن ديناً جعلك تتعامل معي هذا التعامل لدين حق.
ஒரு யூதன் இஸ்லாத்திற்கு வர அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களின் பிறர் நலம் பேணல் மேலோங்கி இருந்ததே முக்கிய அம்சம் என்பதை நம்மால் புரிது கொள்ள முடிகிறது.
சென்னையின் வெள்ளத்தில் இஸ்லாமியர்களின் அர்பணிப்பு அலாதியானது. மத பாகுபாடின்றி கழுத்தளவு வெள்ளத்திலும் உயிரையும் பொருட்படுத்தாமல் நல்லோர் தீயோர் என அனைவரையும் காப்பாற்றிய விஷயம் எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இரு முஸ்லிம்  வாலிபர் சென்னை சென்றிருந்த சமயம் ஆட்டோவில் பயணம் செய்து பயணத் தொகை கொடுத்த போது அந்த ஆட்டோக்காரர் பணத்தை வாங்க மறுத்தார். காரணம் கேட்டதற்கு சென்னையில் வெள்ளம் வந்த நேரத்தில் முஸ்லிம்கள் இல்லாமலிருந்திருந்தால்  நாங்களெல்லாம் செத்துருப்போம் என அவர் சொன்ன வார்த்தை உள்ளத்தை உறைய வைத்தது.
அதே போன்று இன்னொரு இந்து சகோதரர் பாய்மார்கள் எல்லாம் பாகிஸ்தான் போ பாகிஸ்தான் போ என்று காவிகள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நல்ல வேலை அவர்கள் அங்கு செல்லவில்லை. சென்றிருந்தால் எங்கள் கதி அதோகதி தான் என்று அவர் குமுறிய விசயங்கள் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த தியாகம் செய்ய  முஸ்லிம்கள் முன்வந்த காரணம் சத்திய தூதர் சர்தார் நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்த பிறர் நலம் பேணல் தான். 
நாம் கடைபிடிக்க வேண்டியவைகளில் சில
1)அண்டை வீட்டான் பசித்திருக்க நீ மட்டும் உண்டு புசிக்காதே என்கிறது மார்க்கம்.
2) நம் வீட்டுக் குப்பையையோ, நம் வீட்டு சாக்கடை நீரையோ அடுத்த வீட்டுக்கு தொந்தரவு தரும் வகையில் அமைக்க கூடாது.
3) பக்கத்துக்கு வீட்டுக்கு காற்று போகாதவாறு நம் வீட்டு சுவரை உயர்த்தக்கூடாது.
4) பாதையில் கிடக்கும் பொருளை பிறருக்கு துன்பம் தராதவாறு அப்புறப்படுத்துதல்.
5) சாலையில் எச்சில் இடது புறமாக துப்புதல்.
6) நிழல் தரும் மரங்களுக்கு கீழே சிறுநீர் கழிக்காமலிருத்தல்.
இதுவெல்லாம் ஹதீஸ்களில் வரக்கூடிய விசயங்களே.
பிறர் நலம் பேணி மறுமையில் உயர்வான அந்தஸ்தை பெரும் நன்மக்களாக அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்கி அருள் புரிவானாக.ஆமீன் ஆமீன் யா இப்பால் ஆலமீன்.

குறிப்பு வழங்கியவர் : நஸீர் மிஸ்பாஹி 

தொகுத்து வழங்கியவர் : பீர் பைஜி