வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

சட்டங்கள்

வணக்கம்,வழக்கம்,வணிகம்,இல்லறம்,நல்லறம்,தொடர்பான வினாக்களுக்கு ஆதாரத்துடன் அளிக்கப்பட அருமையானபதில்கள்

குழந்தைப் பெயர்கள்

அரபு மற்றும் அர்த்தத்துடன் முஸ்லிம் குழந்தைகளுக்கான அழகுத் திருப் பெயர்கள்

அரபுக் கல்லூரிகள்

தரணி எங்கும் தலைசிறந்து விளங்கும் அரபுக் கல்லூரிகள்

வலைதள வல்லுநர்கள்

இந்த தளத்தில் அரும்பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள்

20 November 2014

தொ(ல்)லைக்காட்சியும் அதன் விபரீதங்களும்


றைவன் இவ்வுலகில் மனிதன் வாழ்வதற்கு தேவையான அனைத்து ஏற்ப்பாடுகளையும் அழகான முறையில் அமைத்துள்ளான்.
இன்றைய உலகம் முன்னேற்றப்பாதையில் வீறுநடை போட்டுகொண்டிருக்கிறது அந்த அடிப்படையில் மின்னணு சாதனங்கள் அவசிய தேவையாகிவிட்டது.

17 November 2014

அதிசய மனிதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

தகவல்: SHAHUL ULAVI

[ உலகில் வாழ்ந்து சென்ற அனைவரும் இவ்வாறு அடுத்தவர்களின் துணையின் அவசியத்துடன் வாழ்ந்தவர்களே. ஆனால் மனித சரித்திரத்தில் ஒருவரைத் தவிர, அவர்கள்தான் மனிதர்களது ஒவ்வொரு வினாடி அசைவுக்கும் வழிகாட்டிச்சென்ற அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகும்.
இத்தனைக்கும் இவர்கள் சாதாரணமான ஆன்மீகவாதி மட்டுமல்ல.

அன்றைய பெரும் வல்லரசான உரோம சாம்ராஜ்யத்துக்கு நிகராக இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை தலைமைதாங்கி வழி நடாத்திய அரசியல் தலைவர்.
தமது மக்களுக்காக களமிறங்கி காவல் புரிந்த மாபெரும் இராணுவத்தளபதி.
நூற்றாண்டுகள் பல கடந்து இன்றும் நிலைத்து நிற்கும் சட்டங்களை இயற்றியவர்.
இன்றும் போற்றப்படும் பொருளியல் கோட்பாடுகளை உலகிற்கு தந்தவர்.
இன்னும் உலகின் அனைத்து துறைகளையும் அசாதாரணமாக அலசியவர்.

உலகின் இன்றைய முதன்மை துறைகளையெல்லாம் இஸ்லாத்தின் கீழ் கொண்டு வந்த அதிசய மனிதர்.]
அதிசய மனிதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
 எங்கிருந்து கிடைத்தது அறிவு?

"முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பிறப்பிற்கு முன்னரே தந்தை மரணித்து விடுகிறார்கள். தாம் கல்வி பெற வேண்டிய வயதில் தாயார் ஆமினாவும் மரணித்து விடுகிறார்கள். இவர்களது வாழ்நாளில் கல்வியறிவூட்டிய ஆசிரியர்களாகவும் எவருமே இருந்ததில்லை. இதனால் இவர்கள் எழுதவோ வாசிக்கவோ தெரியாதவர்களாகவே வாழ்ந்தார்கள்.
அவ்வாறே இவர்களது இறை தூதுத்துவம் 40வது வயதில் கிடைக்கும் வரை சமூகசீர்திருத்தம் குறித்து எவர்களுடனும் பேசிக்கொண்டிருந்ததற்கான ஆதாரங்களை எவராலும் எங்கு தேடியும் துளியும் பெறமுடியாது. மாறாக இக்கருத்துக்கு எதிரான ஆதாரங்களையே சேகரிக்க முடிகிறது. ஆக அறிவு புகட்ட மாதா, பிதா, குரு என்ற யாரும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இருந்ததில்லை. வாசித்தறியும் ஆற்றலுமிருந்ததில்லை கேள்வி ஞானமும் இருந்ததில்லை."
முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்பற்றிய இக்கூற்றுக்கள் இன்றைய அனைத்து வரலாற்றுஆய்வாளர்களாலும் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களாகும். பகிரங்கமாக எதிர்ப்பவர்களும் கூட இதற்கெதிரான தமது வாதங்களை நிறுவ முடியாது மௌனிக்கவே செய்கின்றனர். இவைகளை உறுதிப்படுத்த பலமான ஆதாரங்கள் உள்ளதே இவற்றுக்கு காரணமாகும். அவைகளிலொன்று; முதலில் கடுமையாக எதிர்த்து நின்ற அன்றைய மக்களுக்கு மத்தியிலேயே முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அ


வர்களை எழுத வாசிகத் தெரியாதவர், எதுவுமே அறிந்திராத "உம்மி" என திருக்குர்ஆன் அடையாளப்படுத்தி இருந்தது
"அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். (29:48)"
(நபியே!) நீர் கூறுவீராக "மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனேஉயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய அவன் தூதரின் மீதும்நம்பிக்கைக் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்." (7:158)(இன்னும்-11:49/7:158/62:2/4:164)
இவ் இறை வசனங்களில் சிறிதளவும் சந்தேகமில்லாதிருந்த காரணத்தினாலேயே இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாழ்நாளிலேயே இறைத்தூதராக அவர்களை அங்கீகரித்தார்கள். அவர்களுக்காக இவ்வுலக செல்வ சுகங்களையெல்லாம் துறக்கும் துணிவையும் பெற்றார்கள். எதிர் கருத்துக்கொண்டவர்களது விதண்டாவாதத்தை தகர்த்தெறிய இவ்வாதாரம் ஒன்றே போதும் என கருதுகிறேன்.
அல்லாஹ் அத்தாட்சிப்படுத்தியுள்ள முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாழ்வை ஆதாரமாகக் கொண்டு இன்னும் பல கேள்விகளுக்கு நாம் விடை தேட வேண்டியுள்ளது.
o பாலைவனத்தில் வாழ்ந்த படிப்பறிவே இல்லாத சாதாரண மனிதரால் எவ்வாறு இன்றைய நவீன உலகம் வியக்கும் திருக்குர்ஆனைத் தர முடிந்தது?
o இன்றைய விஞ்ஞானம் மெய்பித்து நிற்கும் உண்மைகளை ஆறாம் நூற்றாண்டில் இவர்களால் எவ்வாறு துல்லியமாக கூற முடிந்தது?
o எவ்வாறு இவர்களால் முன்னைய வேதங்களையும் வரலாறுகளையும் கச்சிதமாகவும் அவைகளை விட விரிவாகவும் கூற முடிந்தது?
o அண்ட பால் மண்டலங்களின் ஒழுங்குகளைப் பற்றியும், முள்ளந்தண்டிலிருந்து உருவாகும் விந்தணு பற்றியும், பசும் மரத்திலிருந்து இறைவன் தீயை உண்டாக்கினான் என்றும் எவ்வாறு இவர்களால் கூற முடிந்தது?
o இவ்வாறு சிக்கலான விடயங்களையெல்லம் கூறியதுடன் நில்லாது;இவைகளனைத்தும் இறைவனது வசனங்களேயன்றி வேறில்லை முடிந்தால் பொய்ப்பித்துக் காட்டுமாறு எவ்வாறு இவர்களால் சவால் விட முடிந்தது?


o எவ்வாறு இவர்களால் இன்றைய உலகில் நிரூபிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள முன்னறிவிப்புகளையெல்லாம் கூற முடிந்தது?
o எவ்வாறு இவர்களால் பெரும்சட்ட வல்லுனராக முடிந்தது?
o எவ்வாறு இவர்களால் பெரும் சாம்ராஜ்யத்தையே நிர்வகிக்கவும் வழிகாட்டவும் முடிந்தது?
o எவ்வாறு இவர்களால் உன்னத பொருளியல் கோட்பாடுகளை கூற முடிந்தது?
o எவ்வாறு இவர்களால் முழு மனித வாழ்க்கைக்குமே வழிகாட்ட முடிந்தது?
o மொத்தத்தில் மனித உள்ளங்களை எவ்வாறு இவர்களால் பக்குவபடுத்த முடிந்தது?
அல்ஹம்துலில்லாஹ்(எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கேயுரியது). இக்கேள்விகளைப் போன்ற இன்னும் அனைத்து கேள்விகளுக்கும் முஃமீன்களினது பதில் "வணங்கத்தகுந்த நாயன் அல்லாஹ்வேயன்றி வேறில்லை; அவனது திருத்தூதரே முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்பதாகும்.
"உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்; அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது. நீங்கள் அறிய மாட்டீர்களா? (குர்ஆன்-21:10)"
 ஆலோசனைகளை வழங்கியது யார்?

"மனிதனானவன் அடுத்த மனிதனை ஏதாவது ஒரு விதத்தில் சார்ந்திருக்கவே வேண்டும்" என்பதே இறை நியதி. அவனே உலகின் தனிப்பெரும் அறிவாளியாக இருந்தாலும் சரியே அவன் அறியாத அடுத்த துறையும் இருக்கவே செய்யும். அப்பெரும் அறிவாளி அடுத்ததுறையினுள் நுழையும் போது அத்துறை சார்ந்தவனை துணைக்கழைக்கவே வேண்டும்.இதுவே இன்றைய தினம் வரை வரலாறு தரும் பாடமும், இறைவன் ஏற்படுத்தியுள்ளநியதியுமாகும்.
"பொருளாதார மேதைக்கு நிர்வாகங்கள் பற்றி தெரிந்திருப்பதில்லை, இராணுவ மேதைக்கு அரசியல் தெரிந்திருப்பதில்லை. ஏன் உயிரியல் விஞ்ஞானிகளுக்கு பௌதீகவியல் விஞ்ஞானம் தெரிந்திருப்பதில்லை."
உலகில் வாழ்ந்து சென்ற அனைவரும் இவ்வாறு அடுத்தவர்களின் துணையின் அவசியத்துடன் வாழ்ந்தவர்களே. ஆனால் மனித சரித்திரத்தில் ஒருவரைத் தவிர, அவர்கள்தான் மனிதர்களது ஒவ்வொரு வினாடிஅசைவுக்கும் வழிகாட்டிச்சென்ற அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகும்.
இத்தனைக்கும் இவர்கள் சாதாரணமான ஆன்மீகவாதி மட்டுமல்ல.
அன்றைய பெரும் வல்லரசான உரோம சாம்ராஜ்யத்துக்கு நிகராக இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை தலைமைதாங்கி வழி நடாத்திய அரசியல் தலைவர்.
தமது மக்களுக்காக களமிறங்கி காவல் புரிந்த மாபெரும் இராணுவத்தளபதி.
நூற்றாண்டுகள் பல கடந்து இன்றும் நிலைத்து நிற்கும் சட்டங்களை இயற்றியவர்.
இன்றும் போற்றப்படும் பொருளியல் கோட்பாடுகளை உலகிற்கு தந்தவர்.
இன்னும் உலகின் அனைத்து துறைகளையும் அசாதாரணமாக அலசியவர்.
உலகின் இன்றைய முதன்மை துறைகளையெல்லாம் இஸ்லாத்தின் கீழ் கொண்டு வந்த அதிசய மனிதர்.
இவ்வாறு அல்லாஹ் அத்தாட்சிப்படுத்தியுள்ள முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சாதனைகளை ஆதாரமாகக் கொண்டு இன்னும் பல கேள்விகளுக்கு நாம் விடை தேட வேண்டியுள்ளது.
o இன்றைய நூற்றாண்டின் உலகின் பாதிப்பேர்களினது வாழ்வுக்கு வழிகாட்டியாக வாழ்ந்து சென்றுள்ள, வாழ்வுக்கான வரையறைகளை காட்டி சென்றுள்ள முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆலோசனைகள் கொடுத்தவர்கள் யார்?
o அன்றைய உலகின் தனிப்பெரும் வல்லரசான ரோம சாம்ராஜ்யமே ஆட்டங்காணுமளவு ஆட்சி நடத்திய இவர்களுக்கு ஆலோசனைகள் கொடுத்தவர்கள் யார்?
o அன்றைய உலகில் மட்டுமல்ல கடந்த நூற்றாண்டு வரை எழுச்சியுற்றிருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நிர்வாகத்திற்கான கரு எங்கிருந்து எடுக்கப்பட்டது?
o மேலும் இவர்களுக்கு நவீன விஞ்ஞான உலகாலும் பொய்ப்பிக்க முடியாத விஞ்ஞான ஆலோசனைகள் வழங்கியது யார்?
o மேலும் பொருளியல் ஆலோசனைகளை வழங்கியது யார்?
o மேலும் இராணுவ ஆலோசனைகளை வழங்கியது யார்?
"முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஆலோசனைகள் உலக மக்களில் பாதியளவானோருக்கு இன்று அவசியமாகின்ற நிலையில், இவ்வளவு சாதனைகளையும் புரிந்தவருக்கு எந்த துறையிலும் எந்த மனிதரது ஆலோசனைகளும் தேவைப்பட்டிருக்கவில்லையே."
அல்ஹம்துலில்லாஹ்(எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கேயுரியது). இக்கேள்விகளைப் போன்ற இன்னும் அனைத்து கேள்விகளுக்கும் முஃமீன்களினது பதில் "வணங்கத்தகுந்த நாயன் அல்லாஹ்வேயன்றி வேறில்லை; அவனது திருத்தூதரே முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்பதாகும்.
(நபியே!) நீர் (இறைவனால் அனுப்பப்பட்ட) தூதர் அல்லர் என்று நிராகரிப்பவர்கள் சொல்கிறார்கள்; எனக்கும், உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ்வும், வேதஞானம் யாரிடமிருக்கிறதோ அவர்களும் போதுமானவர்கள்" என்று நீர் கூறிவிடுவீராக! (குர்ஆன்-13:43)

வியப்புடன் நோக்கும் உலக பெரு மேதைகள்
 
"மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல்கொண்டேன். (அதை படித்தறியும் போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத்தந்தது வாள் பலமல்ல என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன்.
நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணி காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை,இறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல." ["Mahatma Gandhi- Young India, quated in The light, for 16th September 1924.]

"உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் "முகம்மத்" உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முஹம்மத் போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார்.
வெற்றியின் போது அவர் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்ட அவரது உயர் விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் இல்லாமல் உலகபற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவரது முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள் அவரது மரணம், மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிட வில்லை. மாறாக, சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன."

[Alphonse de Lamartine, HISTOIRE DE LA TURQUIE, Paris, 1854, Vol. II, pp 276-277.]

"உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும்,வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே.
இன்னும் அவர் ஒரு சிறந்த இராஜ தந்திரியாகவும் வணிகராகவும் தத்துவவியலாளராகவும் பேச்சாளராகவும் அரச தலைவராகவும் சீர்திருத்த வாதியாகவும் மற்றும் இராணுவத்தளபதியாகவும் கூட வெற்றியடந்துள்ளார்." [Michael H. Hart, The 100: A Ranking of the Most Influential Persons in History, New York, 1978, pp. 33


"அவர் ஒரே நேரத்தில் போப்பும் சீசரும் ஆவார்; ஆனால் அவர் போப்பின் பகட்டுகள் ஆடம்பரங்கள் எதுவுமில்லாத போப் ஆவார். சீசரின் பாதுகாப்பு படைகள் எதுவுமில்லாத சீசராவார். தயார் நிலையிலுள்ள இராணுவமோ நிலையான நிர்ணயமான வருமானமோ இல்லாமல் வெறும் இறைவனின் இசைவாணையை தெய்வீக அனுமதியை மட்டுமே துணையாக கொண்டு ஆட்சி புரிந்ததாக கூறிக்கொள்ளும் உரிமை மனித வரலாற்றில் எவராவது ஒருவருக்கு இருக்குமானால் அவர் முஹம்மத் ஸல் அவர்களேயாவார். ஏனெனில் ஆட்சி அதிகாரம செலுத்திட தேவையான கருவிகள் துணைச்சாதனங்கள் எதுவுமில்லாமலேயே அதிகாரங்கள் அனைத்தையும் அவர் பெற்றிருந்தார்." [R.Bosworth Smith- Mohammad and mohammadanism, London 1874, P-92]


"முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது கொள்கைகளுக்காக எல்லாவித சித்திரவதைகளையும் கொடுமைகளையும் சகித்துக்கொண்டு அவர்களைத் தமது தலைவராக கருதிய அவர்களின் தோழர்களுடைய உயர்ந்த ஒழுக்க பண்புகளும் அவர்கள் இறுதியில் நிகழ்த்திய சாதனையின் மகத்துவமும் இவையனைத்துமே அவர்களின் அடிப்படையான நேர்மையை நம்பகமான தன்மையை நன்கு எடுத்துரைக்கின்றன. அவர்களை ஏமாற்றுக்காரராகவும் மோசடிக்காரராகவும் கருதுவது இன்னும் பல பிரச்சனைகளையும் கேள்விகளையும் எழுப்புகிறதே தவிர பிரச்சனைகள் தீர்க்கக்கூடியதாக இல்லை. மேலும் உலக வரலாற்றில் மேற்குலகில் முஹம்மதைப்போல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள் வேறெவருமில்லை" [Pro.William Montgomery Watt, Muhammad at Mecca, Oxford 1953, P.52]
எட்வர்ட் கிப்பன் :

"அவர் தமது மார்க்கத்தை பிரச்சாரம் செய்தது வியப்புக்குரியதல்ல. மாறாக என்றும் நீடித்து நிலைத்திருக்கும் பாங்குதான் வியப்புக்குரிய ஒன்றாகும். மக்கா நகரிலும் மதீனா நகரிலும் அவர் வடித்தளித்த இஸ்லாத்தின் அதே அசல் வடிவம் தூய்மை கெடாமல் மாற்றப்படாமல் திரிக்கப்படாமால் பன்னிரெண்டு நூற்றாண்டுகளாக நடந்தேறிய புரட்சிகள் பலவற்றிற்கு பிறகும் இன்று வரை இந்திய ஆபிரிக்க துருக்கிய பகுதிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. சமயத்தைக்குறித்து கற்பனை மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான கருத்தோட்டங்களிலிருந்து இஸ்லாமியர்கள் ஒதுங்கியே இருந்தனர். அவற்றை அடியோடு கிள்ளி எறிந்தும் விட்டார்கள்.
இறைவன் பற்றிய அறிவார்ந்த கருத்தோட்டத்தின் கருத்தோட்டத்தின் மதிப்பு கண்ணுக்கு புலப்படும் உயிரினங்கள் சிலைகள் மற்றும் சட்டங்களின் அளவுக்கு குறைக்கப்பட்டதில்லை. இறைத்தூதருக்கு அளிக்கப்பட்ட உயர் மதிப்புகள் மனிதர் அந்தஸ்த்தை தாண்டி உயர்த்தியதில்லை." [Edward Gibbon and Simon Ockley, History of the Saracen Empire, London, 1870, P.54.]

"சண்டையும், சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது தனிமுயற்சியால் இணைத்து; ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த; பலம்பொருந்திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ?" [Thomas Carlyle - "Heroes and Hero Worship"]

"அரேபியாவின் இந்தத்தூதருடைய வாழ்க்கையையும் ஒழுக்கப் பண்புகளையும் தூய நடத்தைகளையும் படிப்பவர்கள் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அறிந்தவர்களுக்கு அந்த வல்லமை மிக்க மாபெரும் இறைத்தூதர்களில் ஒருவரான இறுதித்தூதரைக் குறித்து உயர்வான எண்ணமே ஏற்படும். எனது இந்த நூலில் நான் பலருக்கும் தெரிந்த பல விடயங்களையே சொல்லியிருக்கிறேன். என்றாலும் நானே அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரும்ப த்திரும்ப படிக்கும் ஒவ்வொரு முறையும் ஆற்றல் மிக்க அரபு போதகரின் மீது மதிப்பும் புதிய மரியாதை உணர்வும் ஏற்படுவதைக் காண்கிறேன்." [Annie Beesant, The Life and Teachings of muhammed 1932, p.4]

அறிவுச்சுடர் இமாம் ஷாஃபிஈ (ரஹ்)


இமாமாவர்கள் தனது பாடத் திட்டத்தை வகைப்படுத்தி, முதலில் குர்ஆன் மற்றும் அதன் விரிவுரை என்றும், அதற்குப் பின் ஹதீஸ் கலை, அதனையடுத்து, இஸ்லாமிய (ஃபிக்ஹு) சட்டக் கலை, அதனை அடுத்து உச்சரிப்பு மற்றும் அரபி மொழி ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார்கள். எகிப்தில் இருக்கும் காலத்தில் தனது எழுத்துப் பணியை விடாது செய்து வந்தார்கள், இஸ்லாமியச் சட்டக் கலை மற்றும் அதன் சட்ட திட்டங்கள் பற்றியும், இன்னும் அவரது மிகப் பிரபலமான நூலான அல் உம்மு நூலையும் இங்கு வைத்துத் தான் எழுதினார்கள்.

இமாமவர்களின் வாழ்வினை நாம் கூர்ந்து கவனித்தோமென்றால், கல்விக்காக அவர்கள் பல நாடுகள் சென்று, அங்குள்ள மார்க்க அறிஞர்களிடம் கல்வி கற்றதோடு, அதன் மூலம் மார்க்கத்தில் நல்ல புலமையையும் பெற்றுக் கொண்டதைக் காண முடிகின்றது. எனவே தான் மதீனாவில் அவர் பெற்றுக் கொண்ட கல்வியையும், இன்னும் ஈராக் கில் வாழ்ந்த அறிஞர்களின் விவேகத்தையும் இணைத்து, அதன் மூலம் பெற்றுக் கொண்ட அறிவை இஸ்லாமிய உலகுக்கு வழங்க முடிந்தது. அவரது கல்விப் பணியை அடுத்து, அவரது தன்மைகள், நேர்மை, நற்பண்புகள் போன்றவற்றை நாம் காண முடிகின்றது.
இமாம் அவர்களுக்கு அல் குர்ஆனைப் பற்றி எந்த அளவுக்கு ஆழமான விளக்கம் இருந்தது என்பதை நாம் பார்தால் ஒருமுறை சூரா வல்அஸர் அத்தியாயத்தைப் பற்றி சொல்லும்போது இமாம் அவர்கள் சொன்னார்கள், ''அல்லாஹ் திருமறையின் வேறு அத்தியாயங்களை இறக்காமல் இந்த அத்தியாயம் ஒன்றை மட்டும் இறைக்கி இருந்தாலும் இது மனித குலத்துக்குப் போதுமானதாகும்'' என்றார்கள்.
''காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்த, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)''. (திருக்குர்ஆன்: 103 : 1,2,3)


அறிவுச்சுடர் இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி
ஆசிய மற்றும் ஆப்ரிக்கத் துணைக் கண்டத்தில் இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மத்ஹப் மிகப் பிரபலமானது. அனைவராலும் அறியப்பட்டதொரு மத்ஹபாக இருந்து வருகின்றது. குறிப்பாக எகிப்து, தெற்கு அரேபியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த மத்ஹபை மக்கள் பரவலாகப் பின்பற்றி வருகின்றார்கள்.

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 17:23]
இமாம் அஷ்ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பாலஸ்தீனில் உள்ள காஸா என்ற இடத்தில் ஹிஜ்ரி 150 ல் பிறந்தார்கள். இமாம் அவர்களின் ஏழாவது தலைமுறையினர், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினுடைய தலைமுறையும் அப்துல் மனாஃப் என்ற கிளையினரிலிருந்து வந்தவர்கள் என்று அறியப்படுகின்றது.
இமாம் அவர்கள் இளமையிலேயே தனது தந்தையை இழந்து விட்டார்கள், அதன் பின் அவரது தயார் தனது பிறந்தகமான மக்காவுக்கு தனது மகனைக் கொண்டு சென்று, அங்கேயே கல்வி கற்க வைத்தார்கள். இமாம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை, அரபி மொழி, இலக்கியம் போன்வற்றிலிருந்து தான் ஆரம்பித்தார்கள், ஆனால் இமாம் அவர்களின் புத்திசாலித்தனத்தினால் கவரப்பட்ட அறிஞர்கள், அவரை குர்ஆன், ஹதீஸ் கலை மற்றும் ஃபிக்ஹுத் துறையில் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறினார்கள்.
மக்காவில் தனது ஆரம்பக் கல்வியை முடித்து விட்ட இமாம் அவர்கள், அதாவது மக்காவில் உள்ள அனைத்து இமாம்களிடம் இஸ்லாமியக் கல்வியைக் கற்று முடித்த பின், மேலும் கல்வியைத் தேடும் ஆவலில் மதீனாவிற்கு - அதாவது அல் முஅத்தா ஹதீஸ் தொகுப்பை எழுதிய இமாம் மாலிக் அவர்களிடம் கல்வி கற்க வேண்டும் என்ற ஆவலில் மதீனா நோக்கிப் பயணப்பட்டார்கள்.
இயல்பிலேயே அனாதையாக ஆகி விட்ட இமாமவர்கள், தனது எழுது பொருட்களாக ஒட்டக எலும்புகளையும், ஈச்ச மர ஓலைகளையும் பயன்படுத்திக் கொண்டார்கள். எனவே, இவ்வளவு பளுவான எழுது பொருட்கள் மற்றும் தனது உடமைகளை எல்லாம் தூக்கிக் கொண்டு, மதீனாவிற்கு பயணப்பட மிகவும் சிரமப்பட்டார்கள். எனவே, தான் இதுவரை எலும்புகளிலும், ஈச்ச ஓலைகளிலும் எழுதி வைத்திருப்பவற்றை தூக்கிக் கொண்டே செல்வதை விட, அவற்றை மனனமிட்டுக் கொண்டால் என்ன என்று அவருக்குத் தோன்றியது.
இன்னும் சிறிய வயது முதற்கொண்டே அதாவது தனது 9 வது வயதிலேயே குர்ஆனை மனனமிட்டு விட்டதனால் ஏற்பட்ட பயிற்சியானது, இதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. எனவே, தான் சேகரித்து வைத்திருந்த இன்னும் தன்னால் குறிப்பு எழுதப்பட்ட அத்தனை தகவல்களையும், தனது அறையை அடைத்துக் கொண்டு மனனமிட ஆரம்பித்து விட்டார்.
இமாம் மாலிக் அவர்களிடம் மாணவராகச் சேர்வதற்கு முன்பாகவே, அவரது அல் முஅத்தா நூலைப் பெற்றுக் கொண்டு, அதன் அநேகப் பகுதிகளையும் மனனமிட்டுக் கொண்டார். அதன் பின் மக்காவின் கவர்னரிடம் சென்று, தான் மதீனாவில் கல்வி கற்பதற்காக வேண்டி, ஒரு பரிந்துரைக் கடிதம் ஒன்றை மதீனா கவர்னருக்கு எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார். இமாம் அஷ்ஷ

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 17:23]
ாஃபிஈ அவர்களைப் பற்றி நன்கு அறிந்திருந்த மக்காவின் கவர்னர் அவர்கள், ஒரு பரிந்துரைக் கடிதத்திற்குப் பதிலாக இரண்டு கடிதங்களை எழுதினார், அதாவது ஒன்றை மதீனா கவர்னருக்கும், இன்னொன்றை இமாம் மாலிக்கி அவர்களுக்கும் எழுதிக் கொடுத்தார்.
அந்தக் கடிதத்தைப் பார்த்த இமாம் மாலிக் அவர்கள் அதிர்ச்சி அடைந்தவராக, கல்வி கற்பதற்குக் கூடவா இப்பொழுது பரிந்துரைக் கடிதம் தேவைப்படுகின்றது என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள். இமாம் மாலிக் மற்றும் இமாம் ஷாஃபிஈ அவர்களுக்கிடையேயான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, இருவரது சந்திப்பும் இனிமையாகவே நடந்தது, மேலும் இமாம் மாலிக் அவர்களுடனான சந்திப்பானது பல வகையிலும் இமாம் ஷாஃபிஈ அவர்களுக்கு உதவியது.

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 17:25]
முதலாவது, அவர் வாழ்ந்த காலத்தில் மிகவும் பிரபலமாக மதிக்கப்பட்ட இமாம் மாலிக் அவர்களிடம், இளைஞரான இமாம் ஷாஃபிஈ அவர்கள் கல்வி கற்கும் நற்பாக்கியம் கிட்டியது.
இரண்டாவதாக, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளியில் கல்வி கற்பதெற்கென்றே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள மார்க்க அறிஞர்களின் அறிமுகம் கிடைத்தது. இவர்களின் பலரது அறிவுக் கூர்மை மற்றும் திறமைகள் மிகவும் பயனுள்ள மார்க்க விளக்கத்தைப் பெற்றத் தந்தன.
இமாம் மாலிக் அவர்கள் தனது மாணவரான ஷாஃபிஈ அவர்களைத் தனது துணை ஆசியராகவே நியமித்துக் கொண்டார்கள் என்று வரலாறு கூறுகின்றது. ஒவ்வொரு நாள் விரிவுரையின் முடிவிலும் மாணவர்களுக்கு அல் முஅத்தாவைப் படித்துக் கொடுக்கும் பொறுப்பு, இமாம் ஷாஃபிஈ அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இமாம் மாலிக் அவர்கள் இறந்த பின்பு, இமாம் ஷாஃபி அவர்களை நஜ்ரான் பகுதிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, எமன் தேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
எனினும், இமாம் ஷாஃபிஈ அவர்களது எமன் வருகையானது பலருக்கு பிடிக்கவில்லையாதலால், இவர் கலவரக்காரர்களாகப் பார்க்கப்பட்ட அப்பாஸியர்களின் ஆதரவாளர் என்ற முத்திரை இவர் மீது குத்தப்பட்டது. அதன் பின் அப்பொழுது பாக்தாதைத் தலைநகராக வைத்து, இஸ்லாமிய கலீபாவாக ஆண்டு கொண்டிருந்த கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள், இமாம் ஷாஃபிஈ அவர்களை பாக்தாதிற்கு வரவழைத்து, அங்கே வைத்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
அல்லாஹ்வின் கருணை மற்றும் இமாம் ஷாஃபிஈ அவர்களின் புத்திக் கூர்மை காரணமாக, கொலைத் தண்டனையிலிருந்து தப்பித்தார்.
இமாம் அவர்களின் கல்வித் தகுதி மற்றும் புத்திக் கூர்மையைக் கண்டு, அதனால் கவரப்பட்ட கலீஃபா அவர்கள், அன்னாருக்கு மரியாதை அளித்ததோடு, அவரிடம் தாராளமாக நடந்து கொண்டார். சிறிது காலம் பாக்தாதில் தங்கி இருந்த இமாமவர்கள், அங்கிருந்த அறிஞர்களுடன் கலந்துரையாடல், விவாதம், போன்றவற்றில் ஈடுபட்டதோடு, மக்களுக்குக் கல்வியைப் புகட்டி வந்ததோடு, பல நூல்களையும் எழுதினார். பின் ஹிஜ்ரி 181 ல் மக்காவிற்கு மீண்டும் திரும்பிய இமாமவர்கள், மூன்றாவது முறையாக பாக்தாதிற்குப் பயணமாகும் வரைக்கும், 17 வருடங்கள் மக்காவிலேயே தங்கி விட்டார்கள். எகிப்திற்குச் செல்வதற்காக இமாமவர்கள் பாக்தாதினை விட்டும் கிளம்பிய பொழுது, இரண்டாவது ஹிஜ்ரி நூற்றாண்டு முடிவடையும் தருவாயில் இருந்தது.
இமாமவர்கள் தனது இறுதிக் காலத்தை எகிப்திலேயே கழித்தார்கள், அங்கேயே ஹிஜ

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 17:25]
்ரி 204 ஆம் ஆண்டு மரணித்தார்கள். எகிப்தில் மிகவும் பிரபல்யமான பள்ளிவாசலாகப் போற்றப்பட்ட அம்ர் இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பள்ளியில் வைத்து, காலையில் இருந்து மதியம் வரைக்கும், ஆண்களும் பெண்களுமாக வந்திருந்து இமாமாவர்களிடம் மார்க்கக் கல்வியைக் கற்று விட்டுச் சென்றார்கள்.
இமாமாவர்கள் தனது பாடத் திட்டத்தை வகைப்படுத்தி, முதலில் குர்ஆன் மற்றும் அதன் விரிவுரை என்றும், அதற்குப் பின் ஹதீஸ் கலை, அதனையடுத்து, இஸ்லாமிய (ஃபிக்ஹு) சட்டக் கலை, அதனை அடுத்து உச்சரிப்பு மற்றும் அரபி மொழி ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார்கள். எகிப்தில் இருக்கும் காலத்தில் தனது எழுத்துப் பணியை விடாது செய்து வந்தார்கள், இஸ்லாமியச் சட்டக் கலை மற்றும் அதன் சட்ட திட்டங்கள் பற்றியும், இன்னும் அவரது மிகப் பிரபலமான நூலான அல் உம்மு நூலையும் இங்கு வைத்துத் தான் எழுதினார்கள். இந்த அல் உம்மு என்ற நூல் தான் ஷாபிஈ மத்ஹபின் மிகப் பிரபலமான நூலாகப் போற்றப்படுகின்றது.
இமாமவர்களின் வாழ்வினை நாம் கூர்ந்து கவனித்தோமென்றால், கல்விக்காக அவர்கள் பல நாடுகள் சென்று, அங்குள்ள மார்க்க அறிஞர்களிடம் கல்வி கற்றதோடு, அதன் மூலம் மார்க்கத்தில் நல்ல புலமையையும் பெற்றுக் கொண்டதைக் காண முடிகின்றது. எனவே தான் மதீனாவில் அவர் பெற்றுக் கொண்ட கல்வியையும், இன்னும் ஈராக் கில் வாழ்ந்த அறிஞர்களின் விவேகத்தையும் இணைத்து, அதன் மூலம் பெற்றுக் கொண்ட அறிவை இஸ்லாமிய உலகுக்கு வழங்க முடிந்தது. அவரது கல்விப் பணியை அடுத்து, அவரது தன்மைகள், நேர்மை, நற்பண்புகள் போன்றவற்றை நாம் காண முடிகின்றது.
உதாரணமாக, பாக்தாதில் அவருக்குக் கிடைத்த அந்தப் பரிசுப் பொருட்களை தான் வைத்திருக்காமல், தான் அந்த இடத்தை விட்டும் நகர்வதற்கு முன்பாகவே, அங்குள்ள தொழிலாளர்களுக்கும், தேவையானவர்களுக்கும் பிரித்துக் கொடுத்து விடக் கூடியவராக இருந்தார்.
இன்னும், இமாமவர்கள் பாக்தாதிலிருந்து மக்காவிற்கு பயணப்பட்ட பொழுது, தன்னுடன் கொண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான தங்க நாணயங்களை, மக்காவிற்குள் நுழைவதற்கு முன்பாகவே மக்காவில் வாழ்ந்த மக்களுக்கு தானமாக வழங்கி விட்டார்கள்.
இன்னும், அவரிடம் இரக்கம், நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை, நற்குணங்கள் ஆகியவை யாவும், அவரை அறிஞராக மட்டுமல்ல, அவரது இந்தக் குணங்களும் அவரது மதிப்பை என்றென்றும் நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய வகையில் அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும், இமாம் அவர்களுக்க

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 17:25]
ு அல் குர்ஆனைப் பற்றி எந்த அளவுக்கு ஆழமான விளக்கம் இருந்தது என்பதை நாம் பார்தால் ஒருமுறை சூரா வல்அஸர் அத்தியாயத்தைப் பற்றி சொல்லும்போது இமாம் அவர்கள் சொன்னார்கள், ''அல்லாஹ் திருமறையின் வேறு அத்தியாயங்களை இறக்காமல் இந்த அத்தியாயம் ஒன்றை மட்டும் இறைக்கி இருந்தாலும் இது மனித குலத்துக்குப் போதுமானதாகும்'' என்றார்கள்.
''காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்த, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)''. (திருக்குர்ஆன்: 103 : 1,2,3)

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 21:07]
இஸ்லாம் பெற்ற அறிவுலக மேதைகள்.

01 .இமாம் அபீ ஹனீபா (ரஹ்) ஹி 80-150 (70 வயது)
02 .இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) ஹி 93-179 (86வயது)
03 .இமாம் முஹம்மது இப்னு இத்ரீஸ் (ரஹ்) ஹி 150-204 (54வயது)
04 .இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) ஹி 164-241 (77வயது)
05 .இமாம் அல்லைத் இப்னு ஸஅத் (ரஹ்)
06 .இமாம் அவ்ஸாயீ (ரஹ்)
07. இமாம் அல் இஸ்ஸு இஸ்ஸுத்தீன்(ரஹ்)
08 .இமாம் ஸுப்யானுத் தவ்ரீ (ரஹ்)
09 .இமாம் இப்னு ஹஸம் (ரஹ்)
10 .இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்)
11 .இமாம் இப்னு கையிம் அல்ஜவஸிய்யா (ரஹ்)
12 .இமாம் முஹம்மது இப்னு அப்துல்ஹ்ஹாப்(ரஹ்)
13 .இமாம் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்)

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 21:17]
புகழ்மிகு தஃப்ஸீர்களும் தஃபஸீர் கலை மேதைகளும்
1. திருக்குர்ஆனின் முதற்பெரும் விரிவுரையாளர் அண்ணல் நபி (ஸல்) அவர்களேயாவர்.
2. அவர்களுக்குப்பின் ஸஹாபாக்களில் குர்ஆனுக்கு தப்ஸீர்-விரிவுரை செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் :

01. அபூ பக்ர் இப்னு அபீ குஹாஃபா (ரலி)
02. உமர் இப்னுல் கத்தாப் (ரலி)
03. உத்மான் இப்னு அஃப்பான் (ரலி)
04. அலி இப்னு அபீ தாலிப் (ரலி)
05. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி
06. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)
07.உபை இப:னு கஃபு (ரலி)
08.ஸைத் இப்னு தாபித் (ரலி)
09.அபூ மூஸல் அஷ.அரி (ரலி)
10 அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி)

தாபியீன்களில் புகழ் வாய்ந்த முபஸ்ஸிர் :
இமாம் முஜாஹித்(ரஹ்)

உலகில் இதுவரை இரண்டு இலட்சம் தஃப்ஸீர்கள்(விளக்கவுரைகள்), மொழிபெயர்ப்புகள் வெளி வந்துள்ளன. அவற்றுள் முக்கியமானவை:-

புகழ் வாய்ந்த தஃப்ஸீர்கள், தொகுத்தவர்கள்
1 ஜாமிவுல் பயான்-ஃபீ தப்ஸீருல் குர்ஆன் (ஆசிரியர்-இமாம் முஹம்மது இப்னு ஜரீர் அத்தபரீ ஹி-310)
2 அல் ஜாமிவு லி அஹ்காமில் குர்ஆன் (இமாம் குர்துபீ)
3 தப்ஸீருல் குர்ஆனுல் அளீம் (இமாம் இப்னு கதீர்-இமாதுத்தீன் அபுல் ஃபிதா)
4 தப்ஸீருல் கஷ்ஷாஃப் (இமாம் அபுல் காஸிம் மஹ்மூது இப்னு உமர் ஸமக்ஸரி ஜாருல்லாஹ்)
5 தப்ஸீர் ரூஹுல் மஆனி (இமாம் ஷிஹாபுத்தீன் அலூஸி)
6 அல்பஹ்ருல் முஹீத் (இமாம் அபூ ஹய்யான்)
7 தப்ஸீர் பஹ்ருல் உலூம் ஸமர்கந்தீ (இமாம் அபுல்லைத் நஸ்ர் இப்னு முஹம்மது அஸ்ஸமர்கந்தீ)
8 மஆலிமுத் தன்ஸீல்-தப்ஸீர் பகவீ ( இமாம் அபூ முஹம்மது அல்- ஹுஸைன் இப்னு மஸ்வூது அல்பகவீ)
9 அத்துர்ருல் மன்தூர் (இமாம் ஜலாலுத்தீன் அஸ்ஸுயூத்தி)
10 தப்ஸீர் ஜலாலைன் (இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி ஹி-864, இமாம் ஜலாலுத்தீன் மஹல்லீ ஹி-911. இருவரும் சேர்ந்து தொகுத்தது)
11 அன்வாருத்தன்ஸீல் வ அஸ்ராருத்ஃவீல்-தப்ஸீர் பைளாவி- (இமாம் நாஸிருத்தீன் அபுல்கைர் அப்துல்லாஹ் அல்பைளாவீ)
12 அத்தப்ஸீருல் கபீர் -மஃபாதீஹுல்கைப்- (இமாம் பக்ருத்தீன் முஹம்மது இப்னு உமர் அத்தைமீ ராஸி ஹி-606)
13 தப்ஸீர் அபுஸ்ஸுஊது (இமாம் அபுஸ்ஸுஊது இப்னு முஹம்மது அல் இமாதீ)
14 தப்ஸீர் இப்னு மாஜா (இமாம் இப்னு மாஜா அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு யஸீத்)
15 தப்ஸீர் நைஸாபூரீ (இமாம் நைஸாபூரீ)
16 தப்ஸீர் நஸஃபீ (இமாம் நஸஃபீ)
17 தப்ஸீர் அல் கதீப் (இமாம் அல் கதீப்)
18 அல்-கஷ்ஃபு வல்பயான்-தப்ஸீர் தஃலபீ- (இமாம் அபூ இஸ்ஹாக் அஹ்மது இப்னு இப்றாஹீம் அத்தஃலபீ)
19 அல் முஹர்ரர்

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 21:17]
அல்-வஜீஸ் (இமாம் அபீ முஹம்மது அப்துல்ஹக் இப்னு காலிப் இப்னு அதிய்யா)
20 அல்-ஜவாஹிருல் ஹஸ்ஸான் (இமாம் அபூ ஸைது அப்தூரஹ்மான் அத்தஆலபீ அல்ஜஸாயிரீ)
21 தப்ஸீருல் காஸின் (இமாம் காஸின்)
22.ஃபத்ஹுல் கதீர் -தப்ஸீருஷ்-ஷவ்கானீ- (இமாம் அஷ்-ஷவ்கானி)
23 அல்புர்ஹானு ஃபீ உலூமில் குர்ஆன் (இமாம் அஸ்-ஸர்கஸீ)
24 தைஸீருல் கரீமுர்ரஹ்மான் (அஷ்-ஷைகு அப்துர் ரஹமான் அஸ்-ஸஃதீ)
25 ஸாதுல் மஸீர் ஃபீ இல்மித்ப்ஸீர் (இமாம் இப்னுல் ஜவ்ஸீ)
26 மஹாஸினுத் தஃவீல் (இமாம் அல்-காஸிமீ)
27 அத்தஃஸீருல் முனீர் லி மஆலிமுத்தன்ஸீல் (இமாம் முஹம்மது இப்னு உமருல் ஜாவீ நவவீ கி.பி 1898)
28 அஹ்காமுல் குர்ஆன் (இமாம் ஷாபியீ (ரஹ்) )
29 தஃப்ஸீருல் மனார் (அஷ்-ஷைகு முஹம்மது ரஷீது ரிளா)
30 தஃப்ஸீர் ஸூரத்துந்நூர் (ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா)
31 அத்தஹ்ரீர் வத்தன்ஸீல் (அல்லாமா அத்தூனிஸித்தாஹிர் இப்னு ஆஷூர்)
32 அய்ஸருத் தபாஸீர் (அஷ்-ஷைகு அபூபக்ர் அல் ஜஸாயிரீ)
33 ஸஃப்வத்துத் தஃபாஸீர் (அஷ்-ஷைகு அஸ்-ஸாபூனி)
34 நைலுல் மராம் மின் தஃப்ஸீர் ஆயாதில் அஹ்காம் (ஷைகு முஹம்மது ஸித்தீக் ஹஸன் கான்)
35 தப்ஸீர் ஷஃராவி (ஷைகு அஷ்-ஷஃராவி)
36 அந்நபவுல் அளீம் (அறிஞர் முஹம்மது அப்துல்லாஹ் தராஸ்)
37 அல்ஜவாஹிர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் கரீம் (ஷைகு தந்தாவி ஜவ்ஹரீ (1870-1940)
(இது விஞ்ஞான விளக்கக்களோடு எழுதப்பட்ட முதல் விரிவுரை நூல்)
38 அத்தப்ஸீர் ஃபீ ளிலாலுல் குர்ஆன் (அஷ்-ஷைகு ஷஹீத் சையிது குதுப்)
39 பைளுல் கபீர் (அஷ்-ஷைகு ஷா வலியுல்லாஹ் அத்தெஹ்லவி)
40 நள்ராத் ஃபீ கிதாபில்லாஹ் (அஸ்-ஸய்யிதா ஸைனபுல் கஸ்ஸாலி)
(முதல் பெண் குர்ஆன் விரிவுரையாளர்)

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 21:22]
சுவனவாசிகள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாயகத்தோழர், தோழியரைப்பற்றி பலசந்தர்பங்களில் ”இவர்கள் சுவர்க்கவாசிகள் ‘ என அறிவித்துள்ளார்கள். இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, தங்களின் கடமைகள் யாவற்றையும் சரிவர நிiவேற்றி பல்வேறு தியாகங்கள் செய்தவர்களைப்பற்றி இறைவன் திருமறையில் புகழ்ந்துரைத்துள்ளான். இவர்களில் இஸ்லாத்தை முதலில் ஏற்றுக் கொண்டவர்கள், அகபா,ஹுதைபிய்யா உடன்படிக்கைகளில் கலந்து கொண்டோர், தங்களின் உற்றார் உறவினரையும் பொருள் உடைமைகளையும் துறந்து nஹிஜ்ரத் செய்த முஹாஜிர்கள்,அவர்ளுக்கு உதவிய அன்ஸார்கள், பத்று ஸஹாபாக்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்களில் செயற்கரிய செயல்கள் செய்த சிலரைப்பற்றி பூரிப்படைந்த இறைதூதர் அவர்களும் மக்கள் புரிந்து கொள்வதற்காகவும், அவர்களின் அந்த அற்புதச் செயல் களை ஆற்றிவருவதற்காகவும் இனம் காட்டியுள்ளார்கள்.

அவர்கள் ஆண்களிலும் உள்ளனர். பெண்களிலும் உள்ளனர். மாண்புக்குரிய அந்த பெருமக்களைப்hற்றியும், சுவர்க்கத்திற்குரிய அவர்களின் அற்புதச்செயல்களைப்பற்றியும் நாமும் தெரிந்து கொள்ள வேண்டாமா ?

அந்த ஆசை எல்லோருக்கும் இருக்கும் என்பதை தெரிந்து அவர்களைப்பற்றி நாம் விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன் முதலில் அவர்கள் யார் யார்? என்பதைப் பார்ப்போம்..

சுவக்கவாசிகளில் 52 பேர்:-
1. ஆண்கள்
01 அஷரத்துல் முபஷ்ஷரா’ என்னும் பத்து பேர். (இவர்களின் பெயர்கள் வரலாற்று ஒளியில்-1ல் குறிப்பிட்டுள்ளோம்.)
11. அல்-ஹஸன் (ரலி) பெருமானாரின் பேரர்.
12. அல்-ஹுஸைன் (ரலி) பெருமானாரின் பேரர்.
13. யாஸிர் இப்னு ஆமிருல் கிந்தீ (ரலி)
14. பிலால் இப்னு ரபாஹா (ரலி)
15. அம்மார் இப்னு யாஸிர் (ரலி)
16. ஜஃபர் இப்னு அபீதாலிப் ‘ அத்தைய்யார்’ (ரலி)
17. உகாஷh இப்னு முஹ்ஸின் (ரலி) ”பாரிஸுல் அரப்”
18. ஸஃது இப்னு மஆத் (ரலி)
19. அம்ர் இப்னு தாபித் (ரலி)
20. ஹாரிதத் இப்னு ஸுராக்கா (ரலி)
21. அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி)
22. உமைர் இப்னுல் ஹம்மாம் (ரலி)
23. அல்-அஃராபிய்ஷ; ஷஹீத் (ரலி)
24. அல்-அப்துல் அஸ்வத் (ரலி) ‘அல்-ஜுன்திய்யுல் மஜ்ஹூல்’
25. அஷ்-ஷஹீதுல் மஜ்ஹூல் (ராமித் தம்ராத்)’ (ரலி)
26. ரபீஆ இப்னு மாலிக் (ரலி)

2. பெண்கள்
1.குர்ஆன் கூறும் இருவர்.
01 அன்னை மர்யம் (அலை)
02 அன்னை ஆசியா (அலை)

02. உம்மஹாத்துல் முஃமினீன்

01. அன்னை கதீஜா பின்த் குவைலித் (ரலி)
02. அன்னை ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரலி)
03. அன்னை ஆயிஷா பின்த் அபீ பக்ர் (ரலி)
04

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 21:22]
. அன்னை ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி)
05. அன்னை ஸைனப் பின்த் குஸைமா(ரலி)
06. அன்னை உம்மு ஸலமா பின்த் அபீ உமையா(ரலி)
07. அன்னை ஸைனப் பின்த் ஜக்ஷ் (ரலி)
08. அன்னை ஜுவைரிய்யா பின்த் ஹாரித் (ரலி)
09. அன்னை ஸஃபிய்யா பின்த் ஹுயய் (ரலி)
10. அன்னை உம்மு ஹபீபா ரம்லா பின்த் அபீ ஸுஃப்யான் (ரலி)
11. அன்னை மைமூனா பின்த் ஹாரித் (ரலி)

(வ அஸ்வாஜுஹு உம்மஹாதுஹும் (நபி) அவர்களின் மனைவியர் விசுவாசிகளின் தாய்மார்கள். அல்-குர்ஆன்33:6)

13. ஸைய்யிதத்துந்நிஸா ஃபாத்திமா (ரலி)
14. ஸுமைய்யா பின்த் கபாத் (ரலி)(உம்மு அம்மார்)
15. அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி)
16. அஸ்மா பின்த் உமைஸ் (ரலி)
16. உம்மு உமாரா நுஸைபா (ரலி)
17. உம்மு ரூமான் (ரலி)
18. உம்மு ஐமன், பரக்கா (ரலி)
19. உம்மு ஸுலைம் பின்த் மல்ஹான்(ரலி) (ருமைஸா)
20. உம்மு ஹராம் பின்த் மல்ஹான் (ரலி)
21. உம்மு வரக்கா பின்த் அப்துல்லாஹ் (ரலி)
22. உம்மு ளஃபர் (ரலி)
23. உம்முல் ஃபள்லு (லுபாபத்துல் குப்ரா) (ரலி)
24. ஸல்மா பின்த் உமைஸ் (ரலி

SHAHUL ULAVI.knr SHAHUL ULAVI.knr, [10.11.14 21:26]
குர்ஆனில் கூறப்பட்ட இறைதூதர்கள் 25 பேர். அவர்களின் பெயர்கள், வருடம், குர்ஆனில் வரும் இடங்கள் (வரிசையாக) வருமாறு

1. ஆதம்(அலை). கிமு. 5872-4942 (25 இடங்கள்
2. இத்ரீஸ்(அலை).கிமு4533-4188 (02 இடங்கள் )
3. நூஹ்(அலை).கிமு 3993-3043 (43 இடங்கள்)
4. ஹுத்(அலை)கிமு. 2450-2320 (07 இடங்கள்)
5. ஸாலிஹ்(அலை)கிமு .2150-2080 (09 இடங்கள்)
6. இப்ராஹீம்(அலை)கிமு. 1997-1822 (69 இடங்கள்)
7. லூத்(அலை)கிமு.1950-1870 (27 இடங்கள்)
8. இஸ்மாயில்(அலை)கிமு 1911-1774 (12 இடங்கள்)
9. இஸ்ஹாக்(அலை)கிமு 1897-1717 (17 இடங்கள்)
10.யாகூப்(அலை)கிமு 1837-1690 (16 இடங்கள்)
11.யூசுஃப்(அலை)கிமு 1745-1635 (27இடங்கள்)
12.சுஅய்ப்(அலை)கிமு 1600-1490 (11 இடங்கள்)
13.அய்யூப்(அலை)கிமு 1540-1420(04 இடங்கள்)
14.துல்கிப்லு(அலை)கிமு 1500-1425 (02 இடங்கள்)
15.மூஸா(அலை)கிமு 1527-1407 (136 இடங்கள்)
16.ஹாரூன்(அலை)கிமு 1531-1408 (19 இடங்கள்)
17.தாவூத்(அலை)கிமு 1041-0971 (16 இடங்கள்)
18.சுலைமான்(அலை)கிமு 0989-0931 (17 இடங்கள்)
19.இல்யாஸ்(அலை)கிமு 0910-0850(03 இடங்கள்)
20.அல்-யஸவு(அலை)கிமு 0885-0795 (02 இடங்கள்)
21.யூனுஸ்(அலை)கிமு 0820-0750 (06 இடங்கள்)
22.ஸக்கரியா(அலை)கிமு 0091-0031(08 இடங்கள்)
23.யஹ்யா(அலை)கிமு 0001-0031(04 இடங்கள்)
24.ஈஸா(அலை)கிமு 0001-கி.பி 0032(25 இடங்கள்)
25.முஹம்மது (ஸல்)கி.பி 0632- கி.பி0571(05 இடங்கள்)


உலகின் முதல் ஆலயம் மஸ்ஜிதுல் ஹராம்

மஸ்ஜிதுல் ஹராம். இதன் பொருள் மாண்பார்ந்த தொழுமிடம் என்பதாகும். இறைவன் தன் திருமறையில் .(அல்-குர்ஆன் 17:1) கஃபாவைக் குறிப்பிட இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளான்.

’புனித பயணம் மேற்கொள்ளவேண்டிய மூன்று பள்ளிவாயில்களில் முதலாவதாக மஸ்ஜிதுல் ஹராம் இடம் பெறுகிறது. மற்ற இரண்டு பள்ளிகள் மஸ்ஜிதுந்நபவீயும் மஸ்ஜிதுல் அக்ஸாவும் ஆகும்.’ (நபிமொழியின் சுருக்கம் :புகாரி,முஸ்லிம்.)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

’(ஒருவர்) ஏனைய பள்ளிகளில் தொழும் தொழுகையைவிட மஸ்ஜதுல் ஹராமில் தொழும் தொழுகை ஓரிலட்சம் மடங்கு மேலானதாகும்’ (அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) ஆதாரம் : அஹ்மது)

கஃபாவைச்சூழ முற்றவெளி இடப்பட்டு அதற்கப்பால் சுற்றிலும் மிகப்பெரிய கட்டடம் துருக்கிய ஆட்சியாளர்களால் எழுப்பப்பட்டது. பின்னர் மீண்டும் அதைச்சுற்றிலும் பிரமாண்டமான புதிய கட்டடம் 60 ஆண்டுகளுக்கு முன் மன்னர் அப்துல் அஸீஸ் இப்னு ஸுவூது அவர்களால் 100 மில்லியன் ரியால் செலவில் கட்டப்பட்டது.

அதன் பிறகு மன்னர் ஃபஹ்து இப்னு அப்துல் அஸீஸ் அதை விரிவுபடுத்தி முகப்புப் பகுதியில் ஆறு பில்லியன் பொருட்செலவில் நவீன குளிர் சாதன வசதிகளுடன் கட்டடம் எழுப்பினார்